அவிநாசி: கோமளவல்லி அம்பிகை உடனமர் கோதீஸ்வர கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து சென்றனர்.
நடுவச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள கோமள வல்லி அம்பிகை உடனமர் கோடீஸ்வரர் (எ) கோதீஸ்வர திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வருகின்ற 25ம் தேதி புதன்கிழமை அன்று, காலை நடைபெற உள்ளது.இவ்விழாவை முன்னிட்டு,ஐநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரியை எடுத்து ஊர்வலமாக வந்தனர். முன்னதாக சிவளாபுரி அம்மன் கோவிலில்,கோ பூஜையும்,அஸ்வ மேத பூஜையும் நடைபெற்றது. இதனையடுத்து, கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோமளவல்லி அம்பிகை உடனமர் கோதீஸ்வர திருக்கோவிலுக்கு, தீர்த்த குடங்களை எடுத்தவாறு ஊர்வலமாக சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும்கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்படிருந்தது.