வாடிப்பட்டி: வாடிப்பட்டி வளையல்கார தெரு காளியம்மன் கோயில் திருவிழா 4 நாட்கள் நடந்தது. அம்மனுக்கு பூத்தட்டு எடுத்து வந்த பெண்கள் திருவிளக்கு பூஜை, முளைப்பாரி வைத்து கும்மிபாட்டு பாடி வழிபட்டனர். பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு அம்மன் பூஞ்சோலை அடைந்தார், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.