பதிவு செய்த நாள்
23
மே
2022
12:05
கோவை: கோவை, ராம்நகரில் உள்ள ஐயப்பா பூஜா சங்கத்தில் சமஷ்டி உபநயனம் பூநுால் அணிவிக்கும் விழா நேற்று நடந்தது.இதில், 31 ஆண் குழந்தைகளுக்கு சாஸ்த்திர, சம்பிரதாய முறைப்படி சமஷ்டி உபநயனம் செய்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து, ஐயப்பா பூஜா சங்க தலைவர் ஜெகன் கூறியதாவது: பிராமண குலத்தில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு, அவர்களது பெற்றோர் குறிப்பிட்ட வயதில் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பது வழக்கம். பூநுால் அணிந்து கொள்வது பிராமணர்களின் முக்கியமான கடமையாகும். இன்றைக்கு மற்ற குலத்தவர்களும் பூநுால் அணிகின்றனர்; பூநுால் என்பது பவித்ரமானது. இதன் மகத்துவம் என்ன வென்றால், பூநுால் அணிந்தவர் பெற்றோர்களுக்கும், ஹிந்து மதத்துக்கும் கட்டுப்பட வேண்டும். கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும். நேர்மையாக, ஒழுக்கத்துடன் வாழவேண்டும். இதற்காகத்தான் இந்த சம்பிரதாயத்தை பிராமணர்கள் காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.சங்க செயலாளர் கணேசன், பொருளாளர் லட்சுமி நாராயணன், துணைச் செயலாளர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.