‘அம்மா’ என்றவுடன் நினைவிற்கு வருவது ‘அன்பு’ என்ற வார்த்தை. நம் மீது பலர் அன்பாக இருந்தாலும், அவை அம்மாவின் அன்பு முன் பலமிழந்துதான் போகும். உலகில் உள்ள அனைவரும் எதிர்பார்ப்புடன்தான் நம்மை அணுகுவார்கள். ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரே ஜீவன் அம்மா. அம்மாவின் குழிவிழுந்த கண்களிலும், நலிந்த கைகளிலும் வழிந்தோடும் பாச மழையில் எல்லோரும் நனைந்திருப்போம். ஆனால் சிலர் திருமணமானவுடன் தன் குழந்தைகளை பராமரிக்கும் பணிப்பெண்ணாக அம்மாவை மாற்றிவிடுகின்றனர். காலம் முழுவதும் குழந்தைகளுக்காக உழைத்து ஓடாய் தேய்ந்த கால்கள், மீண்டும் பேரக்குழந்தைகளுக்காக ஓட ஆரம்பிக்கின்றன. விடுமுறையே இல்லாமல் வேலை செய்யும் அவர்களுக்கு, விடுமுறை அளிக்கலாம் அல்லவா...