நத்தம் : நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. முன்னதாக மே 16 கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
மே 17 கணபதி ஹோமம், லெட்ச அர்ச்சனையை தொடர்ந்து பக்தர்களால் கரந்தமலைக்கு சென்று, தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்பசாமி கோவிலில் இருந்து அழைத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மே 20 நத்தம் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.வி.என்., கண்ணன் சிறப்பு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. நாளை மே 24 அம்மன் குளத்தில் இருந்து பால்குடம், சந்தன குடம், முளைப்பாரி, அக்னிச்சட்டி, வானவேடிக்கையுடன் மின் அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பகவதி மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.