பதிவு செய்த நாள்
24
மே
2022
05:05
அன்னூர்: அன்னூரில், 21 அடி உயர காளி சிலைக்கு, கும்பாபிஷேகம் வரும் 9ம் தேதி நடக்கிறது.
அன்னூர், சிறுமுகை ரோட்டில், கைகாட்டியில், கருப்பராயன் கலாமணி சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 150 வருடங்களாக வழிபாடு நடைபெற்று வருகிறது. கோவில் வளாகத்தில் விநாயகர், மாசாணி அம்மன் சன்னதிகள் உள்ளன. இந்நிலையில் இக்கோவிலில், 21 அடி உயரத்திற்கு காளி சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பராயன், கருப்பழகி சிலைகள், கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டு தங்க நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. கோவில் மண்டபம், சுற்றுச்சுவர், கருவறை ஆகிய பகுதிகளில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வரும் ஜூன் 7ம் தேதி துவங்குகிறது. இரண்டு நாட்கள் வேள்வி பூஜைக்கு பிறகு, 9ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.