பாராக மாறி வரும் திருமறைநாதர் கோயில் பிரம்ம தீர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2022 05:05
மேலூர்: மேலுார், திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தத்தை அறநிலையத்துறையினர் பராமரிக்காததால் வீணாகி வருகிறது.
இக் கோயில் கடந்த 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். சிவபெருமான் சனிபகவானின் வாதத்தை தீர்த்த தலம் என்பதால் வாதவூர் என்ற பெயர் பெற்றது. மேலும் மகாசிவராத்திரி, நவராத்திரி வைகாசி திருக்கல்யாணம் உள்ளிட்ட பல திருவிழாக்கள் பிரசித்தி பெற்ற திருவிழாக்களாகும். கோயிலில் சிவ,கபில,பிரம்ம,வாயு உள்ளிட்ட 7 வகையான தீர்த்தங்கள் உள்ளது. இதில் கோயிலுக்கு வெளியே உள்ள பிரம்ம தீர்த்தம் பராமரிப்பில்லாமல் வீணாகி வருகிறது.
பக்தர்கள் கூறுகையில்- சனி,பைரவருக்கு விளக்கேற்றினால் சகல தோஷங்களுக்கும் நிவர்த்தியாகும் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தமாட முடியாமல் சிரமப்படுகிறோம். கோயில் நிர்வாகத்தினர் பராமரிக்காததால் தீர்த்தத்தை சுற்றிலும் அசுத்தமாகவும் முட் செடிகள் வளர்ந்தும், பாராகவும் மாறி வருகிறது. ஜூன் 2 திரு விழா துவங்க இருப்பதால் கோயில் நிர்வாகத்தினர் சுத்தம் செய்து தீர்த்தத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.