ராமலிங்க சவுண்டம்மன் கோவில் விழா : கரகம் எடுத்து, உடலில் கத்தி போட்டு வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2022 05:05
எழுமலை: எழுமலை அருகே எ.கோட்டைபட்டியில் ராமலிங்க சவுண்டம்மன் வைகாசிப் பொங்கல் கரகம் எடுப்புத் திருவிழா நடைபெற்றது. கோயிலிலிருந்து பத்தர்கள் ஊர்வலமாக உத்தப்புரம் முருகன் கோயில் சென்று அங்கிருந்து கரகம் எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரகம் எடுத்து வரும் வழியில் துர்தேவதைகள் அணுகாமல் இருக்க பக்தர்கள் கத்திகளை தங்களின் உடலில் வெட்டியபடி வந்தனர். கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மாலையில் முளைப்பாரி மாவிளக்கு, நாளை பொங்கலிடுதல், மே 26 ல் கயறு குத்துதல், கரகம் கரைத்தல் வழிபாடுகள் நடக்கும்.