பதிவு செய்த நாள்
24
மே
2022
06:05
சிந்தலவாடி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, அம்மன் திருதேரில் பவனி வரும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த வாரத்தில் லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். நேற்று, மாரியம்மனை திருத்தேரில் வைத்து, தேர் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் செய்து, திருத்தேரில் அம்மன் ஊர்வலமாக பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சிந்தலவாடி, லாலாப்பேட்டை, மேல சிந்தலவாடி, மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, கொம்பாடிப்பட்டி, வல்லம், பிள்ளபாளையம் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம், நீர்மோர் வழங்கப்பட்டது.