பதிவு செய்த நாள்
24
மே
2022
06:05
நாமக்கல்: நாமக்கல் நகராட்சி கணபதி நகரில், அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், கருப்பண்ணசாமி, நாகதேவி சன்னதியும் உள்ளது. கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், ஆறு ஆண்டுக்கு பின், நடப்பு ஆண்டு, கோவில் திருவிழா நடத்த கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த, 9ல், காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்து வருகிறது.
கடந்த, 16ல், அம்மனுக்கு மறுகாப்பு கட்டப்பட்டது. நேற்று, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, நாமக்கல் - மோகனுார் சாலை, குன்னிமரத்தான் கோவில் அருகில் இருந்து, ஊர்வலமாக தீர்த்தக்குடம் எடுத்து செல்லப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. இன்று (மே 22), காலை, 7:00 மணிக்கு, பால் குடம் எடுத்தல், அழகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் பக்தர்கள், அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். நாளை (மே 23), காலை, 7:00 மணிக்கு, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா, 6:00 மணிக்கு, கம்பம் பிடுங்கி நீர் நிலைகளில் விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.