பதிவு செய்த நாள்
24
மே
2022
06:05
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி சாத்தப்புரம் பிரசன்ன மஹாகணபதி கோவில் பிரதிஷ்டா தின உற்சவம் துவங்கியது.
இன்று காலை அபிஷேகம், நித்திய பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு குருஜி ரமேஷ் டிராவிட், கணேஷ் கனபாடிகள், கிரிதர் கனபாடிகள், மஹாபலேஷ்வர் பட்டு ஆகியோரின் தலைமையில் ருத்ரகன பாராயணமும் நடைபெற்றது. நாளையும் தீபாராதனை, சூக்தாதிஜபம் ஆகியவை நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அபிஷேகம், 8.30க்கு லட்சார்ச்சனை, 11.30க்கு மகா தீபாராதனை, மாலை 6.45க்கு செண்டை மேளத்துடன் யானைகள் அணிவகுக்கும் "காழ்ச்ச சீவேலி" ஆகியவை நடைபெறும். உற்சவத்தின் சிறப்பு நாளான சனிக்கிழமை காலை 8 மணிக்கு பூர்ணாபிஷேகம், யானைகள் அணிவகுக்கும் "காழ்ச்ச சீவேலி", பஞ்சவாத்தியம் ஆகியவை நடைபெறும். 12.15க்கு கும்பாபிஷேகம். தொடர்ந்து புஷ்பாபிஷேகம், மாலையில் யானைகள் அணிவகுக்கும் "காழ்ச்ச சீவேலி", தீபாராதனை ஆகியவை நடக்கும். இரவு 9.30 மணிக்கு சிறப்பு அலங்கார பல்லக்கில் மூலவர் எழுந்தருளும் நிகழ்ச்சியோடு விழா நிறைவுபெறும்.