பதிவு செய்த நாள்
25
மே
2022
09:05
உடுமலை: உடுமலை இந்திராநகர் ஜக்கம்மாள் கோவிலில், இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. உடுமலை சி. இந்திராநகரில் செல்வவிநாயகர், ஜக்கம்மாள், கருப்பராயன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று துவங்கியது. இதையடுத்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். நேற்றிரவு சக்தி அழைத்தல் நடந்தது.இந்நிகழ்ச்சியில், இந்திராநகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், இன்று காலை, 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 6:00 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தலும் நடைபெற்றது. மாலையில், பூவோடு எடுத்தலும்நடைபெறுகிறது. நாளை (26ம் தேதி) காலை, 10:00 மணிக்கு அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராட்டுவிழாவும், 27ல் அபிேஷகம், ஆராதனையும் நடக்கிறது.