பதிவு செய்த நாள்
25
மே
2022
03:05
சூலூர்: காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, விமானம் மற்றும் மண்டபத்துக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வந்தன. கடந்த, 23 ம்தேதி காலை, கணபதி மற்றும் நவக்கிரஹ ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தீர்த்தக் குடம், முளைப்பாரிகை ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், புனித நீர் கலசங்களை நிறுவி முதல் கால ஹோமம் பூர்ணாகுதி நடந்தது. நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால ஹோமங்கள் நடந்தன. இன்று அதிகாலை நான்காம் கால ஹோமம் முடிந்து, புனிதநீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 7:15 மணிக்கு, சென்னியாண்டவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. தச தானம், தச தரிசனம் முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோஹரா கோஷங்களை எழுப்பி சென்னியாண்டவரை வழிபட்டனர்.