பதிவு செய்த நாள்
02
ஆக
2012
11:08
கோவில்பட்டி : கோவில்பட்டி சங்கரேஸ்வரி புற்றுக்கோயில் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடந்தது.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் 30ம் ஆண்டு ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ந்தேதி சுவாமி அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் நேற்று ஆடித்தபசு திருவிழாவையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது. இதையடுத்து விநாயகர், முருகன், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் தபசுக்காட்சி நடந்தது.
சிறப்பு பூஜைகளை சுப்பிரமணியய்யர் குழுவினர் செய்திருந்தனர். மேலும் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ, கோவில்பட்டி நகராட்சி சேர்மன் ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்து பேசினர். விழாவில் கோயில் தலைவர் குருசாமி, செயலாளர் சுப்பையா, பொருளாளர் சுப்பிரமணி, துணை தலைவர் தாயப்பன், துணை செயலாளர் தனுஸ்கோடி, ஆலோசகர் முருகேசபாண்டியன், மாரிமுத்து, அதிமுக மாவட்ட அமைப்புசார ஓட்டுனரணி செயலாளர் சங்கரபாண்டியன், நகர செயலாளர் விஜயபாண்டியன், நகராட்சி துணை சேர்மன் ராமர், கவுன்சிலர்கள் இருளப்பசாமி, கலைவாணி கோவிந்தராஜ், ராஜலட்சுமி, மாரியம்மாள், வார்டு பிரதிநிதிகள் 26வது வார்டு அப்பாசாமி, கிட்டு கிருஷ்ணசாமி, கருப்பசாமி, 27வது வார்டு மாரிமுத்து, 27வது வார்டு செயலாளர் மாரியப்பன், அவைத்தலைவர் பெருமாள் பாண்டியன், 28வது வார்டு பொன்மணி, கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் அதிமுகவை சேர்ந்த வேலுச்சாமி, மரியசிங்கம், சுப்பையா, கதிரேசன், கருப்பசாமி, சுப்பையா, முத்துபாண்டியன், சுடலைமுத் து, கிருஷ்ணசாமி, கழுகாசலமூர்த்தி, முத்துபாண்டி, கிருஷ்ணசாமி, வேல்சாமி, சுப்பையா, இருளப்பன், மூக்கையா, கிருஷ்ணமூர்த்தி, ஜெயசீலன், மாரியப்பன், சக்திமாரிராஜ், பெருமாள்சாமி, சத்தியபாமா, வெங்கிடசாமி, கோட்டைசாமி, பரமசிவன், ராமசாமி, கருப்பசாமி, முத்துபாண்டி, சுப்பையாபாண்டியன், வெள்ளைபாண்டியன், பரமசிவன், செல்வம், பால்ராஜ், செல்லப்பாண்டி, சேகர் உள்பட கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.