திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி ஸ்ரீ பாண்டுரங்கன் ஹரி பஜனை கூடத்தில் மூலவர்கள் பாண்டுரங்கன், ருக்மாயி அருள்பாலிக்கின்றனர். அங்கு உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் ஜம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூஜை, தீபாராதனை முடிந்து உற்சவர்களுக்கு மாலை மாற்றி திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.