பதிவு செய்த நாள்
27
மே
2022
06:05
நல்லிபாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, நல்லிபாளையத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு, மே, 10ம் தேதி முதல் காப்புக்கட்டு, மே 17ம் தேதி இரண்டாவது காப்புக்கட்டும் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிேஷகம் செய்ய, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தினமும் அம்மனுக்கு அபிேஷகம், ஆராதனை நடைபெற்றது. மே, 24ம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று அலகு குத்தல், பொங்கல், தீக்குண்டம் இறங்குதல் நடந்தன. இன்று கிடா வெட்டுதலும், நாளை மற்றும் நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பக்கதர்கள் செய்துள்ளனர்.