நெட்டப்பாக்கம்: ஏம்பலம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர், பஞ்சபாண்டவர், திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகளும், சுவாமி வீதியுலாவும் நடந்து வந்தது. முக்கிய உற்சவமான தீமிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில் ஏம்பலம் பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஐ.ஜி., சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.