வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மலைப்பாதையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சங்கராகல்லுாரி மாணவர்கள் நேற்று துாய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதில், மலைப்பாதை , படிக்கட்டு பாதை, மலைமேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் உள்ள குப்பையை அகற்றினர். சுமார், 500 கிலோ எடையுள்ள குப்பை அகற்றப்பட்டு, சோமை யம்பாளையம் ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பணியில், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் என, 70 பேர் ஈடுபட்டனர்.