பதிவு செய்த நாள்
28
மே
2022
10:05
மேட்டுப்பாளையம்: வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில், நேற்று பிரதோஷம் பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில், சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. வைகாசி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், பன்னீர், எலுமிச்சை, சந்தனம், பஞ்சாமிர்தம், நெய், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.