திருப்போரூர், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், வைகாசி மாத கிருத்திகை விழா நேற்று நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள், சரவண பொய்கையில் நீராடினர். நீண்ட வரிசையில் நின்று கந்தபெருமானை வழிபட்டனர். மொட்டை அடித்தல், காது குத்தல், எடைக்கு எடை துலாபாரம், காவடி எடுத்தல் என, தங்கள் வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.