பதிவு செய்த நாள்
30
மே
2022
03:05
மேட்டுப்பாளையம்: ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம், ஹிந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் என, ராஷ்டிரிய ஹிந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.
மேட்டுப்பாளையம் ராஷ்ட்ரிய ஹிந்து மகா சபா பொதுக்குழு கூட்டம், குமரன் குன்றில் நடந்தது. நிறுவனத் தலைவர் வேலு தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். இந்தியா முழுவதும் தீவிரவாத இயக்கமாக செயல்படக்கூடிய, அமைப்புகளை தடை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், சட்டவிரோதமாக நடைபெறும், லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையை தடை செய்ய வேண்டும். ராஷ்டிரிய இந்து மகா சபா சார்பில், தமிழகம் முழுவதும் நடைபெறும், ஹிந்து விழிப்புணர்வு ராமர் ரத யாத்திரைக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம், கோவில்களை விட்டு வெளியேறி, ஹிந்து மக்களிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சுபா என்ற மாற்றுத்திறனாளிக்கு, தொழில் செய்ய, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மாநில துணை பொது செயலாளர்கள் முருகதாஸ், மாணிக்கம், அமைப்பு செயலாளர் சசிகுமார், இளைஞரணி தலைவர் வைரமுத்து, துணைத்தலைவர் முனியப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.