பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமானுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.