அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத் துறை அனுமதி அளித்துள்ளது.
அன்னூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கடந்த 1996ம் ஆண்டு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பஞ்ச வர்ணம் பூசப்பட்டு 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு மேலானதையடுத்து பக்தர்கள், கும்பாபிஷேகம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரினர். கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டம் இன்று (30ம் தேதி) காலை 9:30 மணியளவில், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமசாமி தலைமையில் பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. பக்தர்கள் பங்கேற்று, தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என, விழா கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.