போத்தனூர்: போத்தனூரிலுள்ள பேன்சி மகாலில் சீதாராம திருமண நிகழ்ச்சி விக்னேஸ்வரா பஜனை மண்டலியின் சார்பில் நேற்று முன்தினம் அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சீதாராம ஆவாஹனம் பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தோடாயமங்களம், குருத்யானம் மற்றும் அஷ்டபதி பஜனை ஆகியவை நடந்தன. மாலையில் நாம சங்கீர்த்தனம், பாண்டுரங்க பக்த சரித்திரம் இரவு பஞ்சபதி, தியானம், பூஜை, திவ்யநாமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து நேற்று மேட்டூர் அக்ரஹாரத்திலிருந்து பிராமணர்கள் தானம் பெற்றபடி ஊர்வலமாக மண்டபத்தை வந்தடைந்தனர். இதையடுத்து சீதாராம திருமண நிகழ்ச்சி பஜனை வாயிலாக நடந்தேறியது. மேலும் மலர் அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சனேயர் ஆராதனையுடன் விழா நிறைவடைந்தது. திரளானோர் பங்கேற்றனர்.