* உனக்கென தனிப்பாதையை உருவாக்கினால் வெற்றி உனக்கே. * மன அமைதி வேண்டுமா... யாருடைய குறையையும் காணாதே. * நீண்ட துாரம் ஓடிவந்தால் தான் அதிக உயரம் தாண்டமுடியும். * உன் மனதை தினமும் சுத்தப்படுத்து. * பிறர் முதுகுக்குப் பின்னால் நீ செய்ய வேண்டியது தட்டிக்கொடுப்பது மட்டும்தான். * எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய். * நீ செய்யும் செயலை வைத்துத்தான் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. * அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசி. * உனக்கென ஒரு லட்சியத்தை தேர்ந்தெடு. அதை அடைய முயற்சி செய். * தீமையிலிருந்தும் பாடங்களை மனிதன் கற்றுக் கொள்கிறான். * உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. * ஒரு நேரத்தில் ஒரு செயலை செய். அதையும் முழுமையாக செய். * உனக்கு தேவையான வலிமை உன்னிடமே உள்ளன. * உடலையும், மனதையும் நல்லபடியாக வைத்துக்கொள்.