காரைக்கால்: காரைக்கால் அகரசேத்தூர் மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாறு கொம்யூன் அகரசேத்தூர் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று பூச்சொரிதல் நிகழ்ச்சி மிக விமர்ச்சியாக நடைபெற்றது.வரும் 3ம் தேதி அம்பாள் வீதியுலா புஷ்ப அலங்காரத்தில்,5ம் தேதி அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.வரும் 6ம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது.இரவு காத்தவராயன் கதை பாடல் மற்றும் காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இவ்விழாக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினம் சிறப்பாக செய்து வருகின்றனர்.