மேலூர்: மேலுாரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காமாட்சி உடனுறை கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களி்ன் விமானங்களின் பாலாலய நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜை துவங்கியது.நிர்வாக அதிகாரி வாணி மகேஷ்வரி தலைமை வகித்தார்.சிவாச்சாரியார் தட்சினாமூர்த்தி தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிவில் இன்று சித்திர படங்களுக்கு இன்று(ஜூன் 1) பாலாலயம் நடைபெறுகிறது.