பதிவு செய்த நாள்
01
ஜூன்
2022
06:06
வெள்ளகோவில்: வெள்ளகோவில் மாகாளியம்மன் திருக்கோயிலில் 100 வது ஆண்டு பூச்சாட்டு பொங்கல், குண்டம் திருவிழா நடக்கிறது. 2019 ம் ஆண்டு 99 வது பூச்சாட்டு விழா நடந்தது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பூச்சாட்டு திருவிழா நடைபெறவில்லை. 2022 ல் 100 ம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல், குண்டம் திருவிழா நாளை நடைபெறுகிறது.
கடந்த மே 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் பூச்சாட்டு நேற்று இரவு 8 மணி அளவில் கம்பம், கும்பம் தெப்பக்குளத்தில் இருந்து கோவிலுக்கு புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது, நேற்றிரவு தீர்த்தம் கொண்டு வர கொடுமுடி செல்லுதல். இன்று புதன்கிழமை காலை 6 மணி அளவில் பொங்கல் வைத்தல், தொடர்ந்து காவடி தீர்த்தம் செலுத்துதல்., பகல் 12 மணியளவில் பொங்கல் படைத்தல், மாலை 4 மணிக்கு மாவிளக்கு புறப்பாடு, மாலை 6 மணிக்கு மாவிளக்கு ,பொங்கல் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை வியாழக்கிழமை காலை 6 மணிக்கு வீரக்குமார் கோவில் , தெப்பக்குளத்தில் இருந்து அக்னிச்சட்டி பிறப்புகள், மாலை 5 மணி அளவில் பூக்குழி இறங்குதல், இரவு 9 மணிக்கு கம்பம், கும்பம் கங்கை புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10 மணியளவில் மகா அபிஷேகம் இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா வருதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாகாளியம்மன் திருக்கோயில் வழிபாட்டு குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.