கம்பம், சின்னமனூர் கோயில்களில் ஹிந்து சமய அறநிலை பத் துறை அதிகாரி ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2022 06:06
கம்பம்: கம்பம், சின்னமனூர் கோயில்களில் ஹிந்து சமய அறநிலையத். துறை இணை ஆணையர் பாரதி ஆய்வு மேற்கொண்டார்.
சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில்,கம்பம் கம்பராய பெருமாள் கோவில், மற்றும் வேலப்பர் கோயில்களில் நேற்று காலை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார. சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் திருப்பணி செய்ய ரூ. 40 லட்சமும், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு ரூ. 80 லட்சமும், கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில திருப்பணிக்கு ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவற்றிற்கான மதிப்பீடுகள் தயார் செய்ய முதற்கட்ட ஆய்வு மேற் கொண்டதாகவும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கம்பராய பெருமாள் கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் ஒன்று கட்ட ரூ. 3 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளாதாககவும் தெரிவித்தனர்.கம்பராய பெருமாள் கோவில் திருப்பணி குழு உறுப்பினர்கள் ஒ.ஆர், நாராயணன்,கே.ஆர். ஜெயப்பாண்டியன் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர், இணை ஆணையருடன் கம்பம எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.