மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பத்து உப கோயில்களின் உண்டியல் திறப்பு செயல் அலுவலர், துணை கமிஷனர் அருணாசலம் முன்னிலையில் நடந்தது. ரூ.72 லட்சத்து 50ஆயிரத்து 821 ரொக்கமும், தங்கம் 453 கிராம், வெள்ளி 450 கிராம், வெளிநாட்டு பணம் 139 இருந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு அலுவலர், கோவில் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர், அறநிலையத்துறை தெற்கு, அலங்காநல்லுார் ஆய்வாளர்கள், கோயில் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.