திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், செவ்வாய்க்கிழமைகளில் காலை 6:00 முதல், காலை 9:00 மணி வரை, உள்ளூர் பக்தர்கள், 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழியில், இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். சில நாட்களுக்கு முன், உள்ளூர் பக்தர்களுக்கு இந்த இலவச சிறப்பு தரிசன அனுமதி நிறுத்தப்பட்டது. இதனால் ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்ததால், வழக்கு தொடர்ந்து உள்ளனர். செவ்வாய்க்கிழமையான நேற்றும், உள்ளூர் பக்தர்கள் இலவச சிறப்பு தரிசன வழியில் அனுமதிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கையாக, போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.