பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
06:06
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
செங்கல்பட்டு அடுத்த ராஜபாளையம், காட்டுநாயக்கன் தெருவில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக, சில மாதங்களாக, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலின் உள்ளே புதிதாக பாலகணபதி, பாலமுருகன், மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி, மஹா விஷ்ணு, துர்கை, மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் உள்ளிட்ட தெய்வ சிலைகள், கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து, நேற்று காலை யாகசாலை பூஜைகள் நடந்தன. பின், 10:20 மணிக்கு, முத்து மாரியம்மன் கோவில் விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம், ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டன. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.