பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
06:06
உடுமலை : புங்கமுத்துார் ஸ்ரீ மல்லீஸ்வரி, மல்லீஸ்வரர் கோவிலில், பெரிய கும்பிடு விழா இன்று மகா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது.
உடுமலை ஒன்றியம், புங்கமுத்துாரில், ஸ்ரீ மல்லீஸ்வரி உடனமர் மல்லீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், பெரிய கும்பிடு விழா, இன்று மாலை, 6:00 மணிக்கு, மகா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது.நாளை, (3ம் தேதி) காலை 9:00 மணிக்கு நீர் வார்த்தல், மதியம் 1:00 மணிக்கு தீர்த்தம் கொண்டு வருதல், இரவு 8:00 மணிக்கு, கும்பஸ்தானம் நடக்கிறது.வரும் 4ம் தேதி, காலை 9:00 மணிக்கு, மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தலும், மாலை 5:00 மணிக்கு, பக்தர்கள் பூவோடு எடுக்கின்றனர். வரும் 5ம் தேதி, காலை 9:00 மணிக்கு, சப்த கன்னிமார்களுக்கு, பொங்கல் படைக்கப்படுகிறது.இரவு 9:00 மணிக்கு, சக்தி கும்பம் விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 6ம்தேதி காலை 9:00 மணிக்கு மகா அபிேஷக ஆராதனை, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.