பதிவு செய்த நாள்
02
ஜூன்
2022
06:06
பொள்ளாச்சி : நெகமம், ஜோத்தம்பட்டியில், பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில், விநாயகர், முருகன், மீனாட்சி உடனமர் சுந்தரேஸ்வர் சன்னதிகள் உள்ளன. கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் நடத்த மக்கள் தீர்மானித்தனர்.கும்பாபிேஷகத்தையொட்டி, வரும், 7-ம் தேதி மாலை தீர்த்தம், முளைப்பாரி எடுத்தல் நடக்கிறது. 8-ம் தேதி காலை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவதா அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹுதி, கோபுர கலசம் வைத்தல் நடக்கிறது. அன்று மாலை, 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, யந்திர ஸ்தாபனம் செய்யப்படுகிறது. 9-ம் தேதி காலை கலசம் புறப்படுதல், காலை, 10.45 மணிக்கு கோபுர கலசம் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, விநாயகர் முதலான பரிவார தெய்வங்கள் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்கார ஆராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது.