Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வீரமாத்தி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் 17ம் நூற்றாண்டு மாலைக் கோவில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மதுரையில் 17ம் நூற்றாண்டு மாலைக் கோவில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2022
04:06

அவனியாபுரம்: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனீஸ்வரன், லட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் களப்பணி மேற்கொள்ளும் போது விமான நிலையம் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடித்தனர்.

பேராசிரியர்கள் கூறுகையில்: சங்ககாலம் முதல் தமிழர் கலாச்சாரத்தில் நடுகற்கள் வழிபாடு முறை காணப்பட்டன. குறிப்பாக மன்னர்களுக்கு இடையே ஏற்படுகின்ற போர், பூசல் மற்றும் பிற காரணங்களால் இறந்த வீரர்களுக்கு அவர்களின் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்யும் முறை இருந்தது.

மாலை கோயில்: நிரை கவர்தல், மீட்டல், எதிரிகளிடமிருந்து நாட்டைக் காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறிய மனைவிக்கு அமைக்கப்பட்ட நடுகல்லின் மேல் எழுப்பப்படும் கோவில் மாலைக் கோயில் எனப்படும். மாலைக்கோவிலில் அமைக்கப்படும் சிற்பத்தில் கணவருடன் மனைவியும் இருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தால் என்பதை காட்ட கையை உயர்த்தி இருப்பது போன்றும் அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படுவாள். மனைவியின் உருவம், வீரனின் உருவத்தை விட சிறியதாகவும் கைகள் மட்டும் அமைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இத்தகைய நடுகல்லை குடும்பத்தினருடன் ஊராரும் கோவில் அமைத்து வழிபட்டு வருவது வழக்கம். இத்தகைய கோவில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பர். இப்பகுதி வேளாண்மை செறிந்த பகுதியாகவும், வணிக சந்தை கூடம் இருந்ததாகவும், வேளாண் பகுதியை பாதுகாப்பதற்காக எல்லைப்பகுதியில் போர் வீரர்கள் நிறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. அவன் உயிர்நீத்த பின்பே மனைவி உடன்கட்டை ஏறியதற்கு நடப்பட்ட கல் சதிக்கல்லாக அறியலாம்.

புதைந்த நிலையில் காணப்பட்ட சதிக்கல், தோரணவாயில் கலைநயத்தோடு 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்டது. கல்சிற்பத்தில் ஆண் மற்றும் பெண்ணின் தலையில் கொண்டைப் பகுதி சற்று சாய்வாகவும், ஆடவன் கையில் நீண்ட கத்தியும், அணிகலன்களுடன் கால் பகுதியை மடக்கி தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இக்கல்சிற்பத்தை தற்போது மக்கள் மாலைக்கோவில் என வழிபடுகின்றனர்.

நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் மையமாகக் கொண்ட மதுரையை சுற்றி பல குறுநில மன்னர்கள் ஆண்ட வரலாற்று தடயங்கள் புதைந்த நிலையில் கேட்பாரற்று காணப்படுகிறது என்பதை நாம் அறிய முடிகிறது. இதுபோன்ற கற்சிற்பங்களை பாதுகாத்தல் நமது வரலாற்றுச் சுவடுகளை அழியாமல் பாதுகாக்க முடியும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar