பதிவு செய்த நாள்
03
ஜூன்
2022
04:06
தொண்டாமுத்தூர்: கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.
கலிக்கநாயக்கன்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியில், ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று மாலை, 4:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, முதற்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பிரதான ஹோமங்களும், தீபாராதனையும் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, யாத்ரா தானம் கலசங்கள் புறப்பாடு நடந்தது. அதனைத்தொடர்ந்து, காலை, 9:40 மணிக்கு, சிவாச்சாரியார்கள் தலைமையில், விமான கோபுரத்திற்கும், வீரமாத்தி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.