ஆர்.கே.பேட்டை:காளிகாபுரத்தில், தொடர்ந்து நடந்து வரும் கோவில் புனரமைப்பு பணிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில், கிராம தேவதை செல்லாத்தம்மன் மற்றும் திரவுபதியம்மன் கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. திரவுபதியம்மன் கோவில் சீரமைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. திரவுபதியம்மன் கோவிலில், துாண்களை நிறுவு வதற்காக, பளிங்கு கற்கள் கொண்டு வரப்பட்டுஉள்ளன. அதே நேரத்தில் செல்லாத்தம்மன் கோவிலில், கிரானைட் தரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.ஓரிரு மாதங்களில், இந்த கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.