புதுச்சேரி,-புதுச்சேரி, வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் நேற்று துர்க்கை பூஜை யுடன் துவங்கியது.புதுச்சேரியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் 36ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று மாலை துர்க்காம்பாள் பூஜையுடன் துவங்கியது. இன்று எல்லையம்மன் பூஜையும், நாளை விக்னேஸ்வர பூஜை நடக்கிறது.தெடார்ந்து தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 9ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம், வரும் 13ம் தேதி காலை தேர் திருவிழா,15ம் தேதி திருஞானசம்பந்தர் உற்சவம் நடக்கிறது.வரும் 19ம் தேதி மாலை விடையாற்றி அபிேஷகம், 20ம் தேதி காலை உற்சவசாந்தி சங்காபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.