நாமக்கல் சாய் தபோவனத்தில், மாசி மூன்றாவது வியாழனை முன்னிட்டு, சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள வள்ளிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி, சீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், வைகாசி மாதம் மூன்றாவது வியாழனை முன்னிட்டு, சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை சாய்பாபாவிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் எனும் ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, பல்வேறு பகுதியில இருந்து பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் பாபாவின் பஜனை நிகழ்ச்சி, மதியான் ஆரத்தி எனும் ஆரத்தி பாடப்பட்டு, வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாராதனை நடந்தன. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.