திருமலை திருப்பதி மலை மீது ஷாம்பு பாட்டில் கொண்டு செல்ல தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2022 07:06
திருப்பதி : திருமலை திருப்பதி மலையில் சுற்றுச்சூழலையும் பசுமையையும் பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் உபயோகத்தை முழுமையாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்தவும் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் இனி அலிபிரி சோதனைச் சாவடியில் முழுமையாக சோதனை செய்யப்படுவார்கள்,சோதனையின் போது பக்தர்களிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாட்டில்கள் இருந்தால் அவை மலைமேல் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டு அங்கேயே அதற்கான குப்பை தொட்டியில் சேர்க்கப்படும்.
இனிமேல் மலைமேல் உள்ள வியாபாரிகள் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக மக்கும் அல்லது காகித அட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். பிளாஸ்டிக் ஷாம்பு பாட்டில்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளதால் மலைமேல் உள்ள ஓட்டல் உரிமையாளர்களும், மடம் அமைப்பாளர்களும் பிளாஸ்டிக் தடையை மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், பிளாஸ்டிக் அல்லாத கவர்கள் வழங்குவதற்காக பக்தர்களிடம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம் வசூக்கக்கூடாது துணி மற்றும் காகித பைகளின் விலையை கடைகளின் முன்பாக எழுதி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.