திருநள்ளாறு பிரமோற்சவ விழா : தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2022 07:06
காரைக்கால் : காரைக்காலில் பிரமோற்சவ விழாயொட்டி முன்னிட்டு சனிஸ்வபகவான் கோவில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாறு உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இதனால் பகவானை தரிசனம் செய்ய பல்வேறு பகுதியிலிருந்து தினம் வருகின்றனர்.தொடர் விடுமுறை மற்றும் பிரமோற்சவ விழாயொட்டி முன்னிட்டு நேற்று சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதல் சென்னை,காஞ்சிபுரம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில பக்தர்கள் வருகைப்புரிந்தனர்.பின்னர் நளம் குளத்தில் குளித்துவிட்டு பக்தர்கள் அதிகாலை 4மணிக்கு கோவில் திறக்கப்பட்டது.பின்னர் பக்தர்களை அனுமதிக்கப்பட்டனர்.நீண்ட வரிசையில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சனிஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். இதில் தர்மதரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.சனீஸ்வர பகவானை தரிசனம் மேற்கொண்ட பக்தர்கள் எள் தீபம் ஏற்றி தங்களது தேஷங்கள் நீங்க வேண்டுதலை இணையாக தரிசனம் மேற்கொண்டனர்.மேலும் பக்தர்கள் நலன்கருதி பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.