ஆசனப் பலகையில் அமர்ந்து ஆசிபெற்ற அறநிலையத் துறை அமைச்சர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2022 08:06
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் ஆசன பலகையில் அமர்ந்து குருமகா சன்னிதானத்திடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆசி பெற்றார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்திற்கு நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார் அவரை வரவேற்பதற்காக ஆதீனம் சார்பில் பங்களா முன்பு என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அப்போது அமைச்சர் வந்து நிற்பதற்காக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது சிவப்பு கம்பளத்தில் நிற்காமல் அதனை அகற்ற கோரி எடுத்த பிறகு என்சிசி மாணவர்கள் முன்பு நின்று அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் தொடர்ந்து ஆதீன குருமகா சந்நிதானம் சந்திப்பதற்கு சென்றபோது அவர்கள் சன்னிதானம் எதிரே அமர்வதற்காக விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அமராமல் ஆசனப் பலகை எடுத்து வரச்சொல்லி குருமகா சன்னிதானம் அதிலும் ஆசி பெற்ற பின்னர் அதில் அமர்ந்தவாறு ஆலோசனை நடத்தினார்.