Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வைகாசி ... ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேகம்; பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
08:06

மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும்‌. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று 5ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை 10.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 10ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டம் 13ம் தேதி நடக்கிறது. பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி காலை 6:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 14ம் திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சியும், 15ம் தேதி காலையில் தீர்த்தவாரி முடிந்து குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. அன்றிரவு தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 17ம் தேதி மாலையில் விடையாற்றி உற்சவமும், 18ம் தேதி உற்சவ சாந்தி, அலங்கார திருமஞ்சனத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசாமி, உதவி ஆணையர் செல்வி மற்றும் பட்டர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar