அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே இடையபட்டி கிராம காவல் தெய்வம் சங்கிலி கருப்புச்சாமி கோயில் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. பம்பை, உறுமி மேளத்துடன், வாணவேடிக்கை முழங்க சுவாமி திருவீதிகளில் எழுந்தருளினார். மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் கோயில் முன் பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபாடு செய்தனர். கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.