பரமக்குடி: பரமக்குடி வைஷ்ணவ சபாவின் 40வது ஆண்டுவிழா இரண்டு நாட்கள் நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடந்த விழாவில் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் அர்ச்சகர் விஜயராகவன் பட்டாச்சாரியார் தலைமை வகித்தனர். டிரஷரர் பாலமுருகன், டிரஸ்டி நாகநாதன் முன்னிலை வகித்தனர். விழாவில் ஸ்ரீமத் அகோபில மட மாத இதழ் ஸ்ரீநரசிம்ம பிரியா ஆசிரியர் அனந்த பத்மநாபாசாரியார் சரணாகதி மற்றும் அவன் பாதமே கதி என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் வைஷ்ணவ சபா நிர்வாகிகள் மாதவராம ஐயங்கார், மோதிலால், கிருஷ்ணமாச்சாரி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.