அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2022 04:06
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியக்குடி ஊராட்சியில் உள்ள திருவேங்கடமுடையான் கோயில் வைகாசித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இவ்வாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூமிநீளா சமேத ஸ்ரீனிவாச பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அலங்காரம் நடந்தது. நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தினமும், சிம்ம, ஹனுமந்த, கருட, யானை, குதிரை வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஜூன் 14 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடித்தலும், ஜூன் 17 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.