* நேரத்திற்கு விலை மதிப்பு இல்லாதது. அதை பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள். * பெற்றோரை மதிப்புடன் நடத்துங்கள். அவர்களின் தேவையறிந்து உதவுங்கள். * தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான். * சிறுவர்களிடம் அன்புடன் பழகுங்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுங்கள். * உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான். * லஞ்சம் வாங்குபவர் மீதும், லஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும். * கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள். * இறைவன் உங்கள் உருவங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான். பொன்மொழிகள்