வாழ்க்கை என்றால் ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். இருள் இருந்தால் தானே ஒளியின் அருமை தெரியும். அதுபோல் பிரச்னையானது நிம்மதியின் அருமையை உணர்த்தவே வருகிறது. எனவே எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். எப்படியும் அது ஒருநாள் தீரத்தான் போகிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கத்தான் போகிறீர்கள்.