வைகாசி விசாக விழா : நாக வாகனத்தில் வலம் வந்த வடபழனி ஆண்டவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2022 10:06
சென்னை : வடபழனி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக பெருவிழாவின் நான்காம் நாளான நேற்று நாக வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேதராக முருகப்பெருமான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா விழாவை முன்னிட்டு, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவில் நேற்று நாக வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேதராக முருகப்பெருமான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் தேதி காலை 7.30 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு ஒய்யாரி உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. 12ம்தேதி காலை 9 மணிக்கு சண்முகர் வீதி உலாவும், 10 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம்தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அதன்பிறகு 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.