பதிவு செய்த நாள்
07
ஜூன்
2022
10:06
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா முன்னிட்டு முருகப்பெருமான் வீதி உலா நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் 36வது ஆண்டு வைகாசி விசாக பெருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. விழாவின் 3ம் நாளான நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, சுப்பிரமணியர் ஆவாஹனம், மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மகா அபிஷேகம், அலங்காரம், இரவு 7:30 மணிக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை, தொடர்ந்து அம்பலவாணனின் சொற்பொழிவு, உற்சவர் வீதி உலா நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நிறைவாக 12ம் தேதி காலை 9:00 மணிக்கு விசாக மகாபிஷேகம், சுவாமி புறப்பாடு நடக்கிறது.